உன்னால் முடியும் என்பதால் தான் நீ உயிரினம்

image

ஒரு ராஜாவுக்கு இரண்டு பஞ்சவர்ண கிளிக் குஞ்சுகள் வெகுமதியா வந்துன. ராஜா அந்த ரெண்டையும் பறக்க வைத்து பேசப் பயிற்சி கொடுக்கச் சொன்னாரு. அதுல ஒரு கிளி நல்லா பறந்து வார்த்தைகளும் கத்துக்க ஆரம்பிச்சது. ஆனா இன்னொரு கிளி பறக்க கூடத் தெரியாம ஒரு கிளையில உட்கார்ந்தது உட்கார்ந்தபடியேஇருந்தது.
ராஜா பெரிய அமைச்சர்கள், ஆலோசகர்கள் எல்லோரையும் விட்டு பயிற்சி கொடுக்க வச்சும் கிளி பறக்கல.
இதைக் கேள்விப்பட்டு ஒரு வயசான விவசாயக் குடிமகன் வந்து “நான் பறக்க வைக்கிறேன்”னு சொன்னான்.
அடுத்த நாள் காலை ராஜா கண் விழிக்கும்போது,பறக்காத அந்த பஞ்சவர்ணக்கிளி மரத்தைச் சுற்றி அங்கும் இங்கும் பறந்து சுத்திகிட்டிருப்பதைப் பார்த்தான்.
அவனுக்கு ஒரே சந்தோஷம். “இந்த அற்புதத்தை எப்படி செய்தீங்க?”ன்னு
கேட்க, அதுக்கு அந்த விவசாயி பணிவோட, “அது ரொம்ப சுலபமான காரியம் அரசே! மரத்தில் ஏறி அந்த பறவை உட்கார்ந்திருந்த கிளையை நான் வெட்டி விட்டேன். வேறொன்றுமில்லை.”ன்னாரு.
– இறைவனும் சில சமயம் நம்மை நமது சக்தியை உணரச் செய்ய வேண்டி, நாம் அமர்ந்திருக்கும் கிளையை வெட்டிவிடுவான்.அது நம்ம நன்மைக்குத்தான். நம் சக்தியை ஆற்றலை நாம் உணர வேண்டியேன்னு கருதி நம்மை உயர்த்திக் கொள்ள முயர்ச்சிக்கணும்.
பல சமயங்கள்ல நாம் நமது சக்தியை உணராம ஒரே இடத்தில் அமர்ந்துட்டு பழக்கப்பட்ட வேலைகளை மட்டுமே, அதுதான் நம்மால் முடியும்னு கருதி செய்யறோம். நாம சாதிக்க கூடியவை எண்ணற்றவை முடிவற்றவை.

-Prasannapugazh

Advertisements

One thought on “உன்னால் முடியும் என்பதால் தான் நீ உயிரினம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s