மணிரத்னம் என்ற மனிதர் சுமார் 34 வருடம் திரைத்துறையில் பணியாற்றுகிறார் அதாவது ஒரு தலைமுறை என்றே சொல்லலாம். “நம்ம தாத்தா பாட்டி நாயகனை தியேட்டரில் போய் பார்த்திருப்பார்கள் நம்ம அப்பா அம்மா ரோஜாவை தியேட்டர்ல பார்த்துருபாங்க! இப்ப நம்ம காற்று வெளியிடை பார்க்குறோம்”. இன்னும் அதே இளமையோட அதே துடிப்போட ஒரு வண்ணமையான தன் அழகியல் படைப்பில் எப்படி இப்படி மணிரத்னம் அவர்களால் கொடுக்கமுடியுது.

இதற்கான காரணம் மனிதர்களின் உளவியலையும் இன்றைய மனிதர்களின வாழ்வியலை முக்கியமாக மேல்தட்டு மக்களோட வாழ்வியலை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார் என்றே தான் சொல்லவேண்டும்.

பொதுவாக மணிரத்னம் ஒரு நல்ல கலைஞர் அது அவர் படைப்புகளில் நன்றாக தெரியும் அவர் ஒரு அற்புதமான பிலிம் மேக்கர் ஆனால் ஒரு எழுத்தாளரா மணிரத்னம் கொஞ்சம்  தடுமாறுவார்  இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் அவர் திரைப்படத்தில் பல தழுவல்களை நாம் பார்க்கலாம் உதரணத்திற்கு நாயகன், தளபதி, இருவர் கண்ணத்தில் முத்தமிட்டாள், ராவணன் என பல படைப்புகளை சொல்லலாம். ஆனால் காதல் திரைப்படங்களை பொறுத்த வரையில் அவரது சொந்த எண்ணங்களையே மிகவும் நேர்த்தியகவும் அழகாகவும் படைக்கபட்டவை. அந்த படங்களில் வருகிற ஒவ்வொரு காட்சியை வைத்தே கதை சொல்லலாம் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் மௌன ராகம் திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியில் கதாநாயகி ரேவதி நாயகன் மோகனிடம் சொல்வார் “நீ தொட்டா கம்பளி பூச்சி ஊர மாறி இருக்கு”

அதே போல ஒகே கண்மணி திரைப்படத்தில் நாயகனை பார்த்து நாயகி கூறுவாள் “அம்மாவ வர சொல்லவா” எதற்காக என்று நாயகன் கேட்க “கல்யாணத்த பத்தி பேச” என கதாநாயகி நித்யா மேனன் கூறும்போது நாயகன் வெளிபடுத்தும் அந்த முக பாவனையே படத்தின் மொத்த கதை.

இப்போது வெளியாகியிருக்கும் காற்று வெளியிடை திரைப்படத்தில் கூட அதை அற்புதமாக செய்திருக்கிறார். “நீ என்ன பண்ணாலும் நான் ஏன் உன்ன தேடி தேடி வரேன்” என நாயகி கூறும் அந்த காட்சியில் மொத்த கதையையும் சொல்லிவிட்டார் மேலும் நாயகனின் ஆணாதிக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒவ்வொரு காட்சியிலும் பதிவு செய்திருப்பார்.
மணிரத்னம் போன்ற ஒரு இயக்குனர் நம் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த சொத்து. சிலர் கதை இல்லை லாஜிக் இல்லை என்று கூறுவது அவரவர் விருப்பம் ஆனால் திரைப்படத்தை எப்படி பார்க்கவேண்டுமென்றே  தெரியாமல் எல்லோரும் சேர்ந்து சொல்லும்போது நாம் சொல்ல வேண்டியதாய் இருக்கிறது. கதை இருந்த எத்தனையோ திரைப்படங்களை நாம் கண்டுகொள்ளவில்லை கமல்ஹாசன் போன்ற கலைஞனின் எத்தனை கதை உள்ள படங்களை நாம் ரசித்திருக்கிறோம் ஹேராம், ஆளவந்தான், மகாநதி, குணா,  அன்பே சிவம் மற்றும் உத்தம வில்லனை நாம் ரசித்திருகிறோமா? இல்லை ஆனால் ஒன்றுமில்லாத அவ்வை சண்முகி, மைக்கெல் மதன காமராசன், பஞ்ச தந்திரம், அபூர்வ சகோதர் போன்ற திரைப்படத்தை நாம் கைதட்டி ரசித்திருக்கிறோம் ஆனால் இப்போது நாம் படத்தில் கதை இல்லையென்று சொல்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.

இது மணிரத்தினத்தை ஆதரித்து எழுதுவது அல்ல ஒரு திரைப்படத்தை எப்படி பார்க்க வேண்டும் என்பதற்கான பதிவு. நாம் மணிரத்தித்தை கிளாசிக் கிளாசிக்கென்று  சொல்லி நாம் தூர நின்று பார்க்கும் மனிதர்களை படமாக்கி கொண்டிருக்கிறார். இயக்குனர் ஷங்கரை பிரம்மாண்ட இயக்குனர் என்று சொல்லி சொல்லி படத்திற்கு தேவையே இல்லாத பிரம்மாண்டங்களை செய்து கொண்டிருக்கிறார். பாலாவை ஒரு வித்தியாசமான படைப்பாளியென்று மூத்திரை குத்தி அவரை நாம் படம் எடுக்க வைத்தது  தாரை தப்பட்டை போன்ற நாகரிகமற்ற  படங்கள். இது எல்லாம் நாம் செய்த தவறு.

ஹாலிவுட்டில் ஆஸ்கர் வாங்கின ரெவனன்ட் என்ன கதை ஒரு தந்தை தன் மகனுக்காக பலி வாங்குகிற அழுத பழைய கதை அதை நாம் கொண்டாடினோம் ஏனென்றால் அதை எடுத்த விதம் காட்டு மிராண்டிகளாக நடிகர்களை உருமாற்றி வெறும் கேமராவை மட்டும் எடுத்து கொண்டு போய் எடுக்கப்பட்ட படம் அதை உலக சினிமா ரசிகர்கள் ஒரு வாழ்வியல் அழகியலாக பார்த்தார்கள். சமிபத்தில் ஆஸ்கர் வாங்கிய மூன்லைட்டில் கூட பெரிய கதை ஒன்றும் இல்லை ஒரு மனிதனுடைய மூன்று பருவங்கள் அவ்வளவு தான் அதில் கதை எங்கே என கேட்க முடியாது. அதை நம் ரசிகர்கள் பார்த்தால் சிலாகிப்பார்கள் அதை இங்கே படமாக்கினால் கழுவி ஊற்றுவார்கள். ஷாஷாங்க் ரிடம்ஷனில் டாம் ராபின்ஸ் சிறையில் இருந்து தப்பித்த காட்சியை பாராட்டியவர்கள் இன்று காற்று வெளியிடையில் கார்த்தி செய்யும் போது மறுக்கிறார்கள்.


மணிரத்தினம் அவர்களை ஒரு இந்திய ஸ்பீல்பர்க்காக தான் பார்க்கிறேன் ஏனென்றால் ஸ்பீல்பர்கால் மட்மே தான் ஸ்கின்ட்லர்ஸ் லிஸ்ட் போன்ற கிளாஸும் ஜீராஸிக் பார்க் போன்ற மாஸும் எடுக்க முடியும்.

சங்கரை ஒரு இந்திய கேமரோனாக
ராஜமௌலியை ரிட்லி ஸ்காட்டாக
கமலஹாசனை ஒரு இந்திய நோலனாக தான் பார்க்க முடிகிறது.

ஆனால் என்னுடைய ஆசை இந்தியாவில் ஒரு அல்ஜான்ரோ இன்யாரித்தோவை பார்க்கவேண்டும் என்று தான்.

அதற்கு நாம் தயாராக இருக்கவேண்டும் ஆனால் நம் அறிவு மிகவும் கீழே இருப்பது வருத்திற்குரியது. புத்தகம் வாசிக்கும் சமுகமே நல்ல சிந்தனைகளை பெறும் ஹாலிவுட்டில் முக்கால்வாசி திரைப்படங்கள் நாவலை தழுவி எடுக்கப்படுகிறது அங்கே திரைப்படத்திற்கு இருக்கும்  வர்த்தகத்தை விட புத்தகத்திற்கு வர்த்தகம் ஜாஸ்தி. அதனால் அவர்கள் நாசாவை வைத்து நூறு படங்கள் எடுப்பார்கள் நாம் இஸ்ரோவை வைத்து ஒன்று கூட எடுக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.

– பிரசன்ன ரணதீரன் புகழேந்தி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s