காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எங்கு பார்த்தாலும் சினிமா ரசிகர்கள் உச்சரிப்பது ஒரே ஒரு வார்த்தையைதான் அது தான் பாகுபலி. அமைச்சர் முதல் சாமானியன் வரை எல்லோரும் சிலாகித்து பேசுகிறார்கள் படத்தை பார்த்துவிட்டு கொண்டாடுகிறார்கள் ஆனால் நம் பாட்டன்களும் பாட்டிகளும் இந்த திரைப்படத்தை எளிதாக கடந்து செல்கிறார்கள் எப்படி அவர்களால் முடிகிறது? ஏன்னென்றால் இது அவர்களுக்கு புதிதல்ல மன்னாதி மன்னன், பாக்தாத் திருடன், மலைக்கள்ளன், கர்ணன், ராஜ ராஜ சோழன், வஞ்சிக்கோட்டை வாலிபன் என எம்ஜிஆரும் சிவாஜியும் போதா குறைக்கு ஜெமினியும் கலந்து கட்டி சலிக்க சலிக்க அவர்கள் கண்கள் பார்த்து சலித்ததை தான் நாம் இன்று கொண்டாடுகிறோம் ஆகயால் பாகுபலியை பார்க்கும்போது அவர்களுக்கு சற்று டொங்கல் போல தான் தெரியும். 

இப்போது நாம் செய்யும் கொண்டாடத்திற்கும் ஓர் காரணம் உண்டு சுமார் இரண்டு தலைமுறைகளாக அதாவது கமல்-ரஜினி ஆளுமையிலும் சரி இப்போது விஜய்-அஜித் ஆளுகையிலும் சரி சரித்திர பின்னனியில் நம் தலைமுறை படம் பார்ததேயில்லை. அப்படியிருக்க பாகுபலியை போல ஒரு சரித்திரத்தை இந்திய சினிமாவில் பார்க்கும் போது மனம் லயிக்க தான் செய்கிறது. இம்சை அரசன்  23ம் புலிகேசிக்கு பிறகு தமிழ் மக்கள் பார்க்கும் முழு நீள சரித்திர படம் என்பதால் நமக்கு பெரிய விருந்தாக இருக்கலாம்.

மேலும் படத்தில் இடம்பெறும் பல உலக திரைப்படங்களின் தழுவல்களையும் பல சரித்திர நாவல்களின் சாயல்களையும் பார்த்தவர்களுக்கும் படித்தவர்களுக்கு மட்டுமே தெரிகிறது என்றால் இந்திய வாசகர்களும் ரசிகர்களும் பார்ப்பதிலும் படிப்பதிலும் இன்னும் சற்று கிழே தான் இருக்கிறார்கள் என்று தான் தோன்றுகிறது.

குறிப்பாக திரைப்படத்தில் மகாபாரதமும் பொன்னியின் செல்வனும் பல இடங்களில் நினைவுப்படுத்துகிறது.  முதல் பாகத்தில் சிவகாமி தேவி குழந்தையை ஆற்றில் தூக்கி வரும் காட்சியே பொன்னியின் செல்வன் நாவலின் தலைப்பின் காட்சி தான் ராஜராஜ சோழனை மந்தாகினி தேவி தூக்கி வரும் காட்சியை கல்கி விவரிக்கும் போது வாசகனுக்கு மயிர் கூச்சம் ஏற்பட்டிருக்கும். மேலும் பிங்கலதேவனாக வரும் நாசரை மகாபாரத திருராட்டிரராக பல்வாள்தேவனை துரியோதனனாக பாகுபலியை அர்ஜுனனாக தேவசேனாவை திரௌபதியாக பாரதத்தை படித்தவர்களால் பார்க்கமுடிகிறது. அதை காட்சிபடுத்திய விதத்திலும் நம்மால் உணர முடிகிறது. திருராட்டிரரின் ஊனத்தால் ஆட்சியுரிமை மறுக்கபட்டது (பிஜிலதேவனுக்கு ஆட்சியுரிமை மறுக்கபடுகிறது), துரியோதனன் இளவரசனாகவும் முடியரசனாகவும் பதவி ஏற்றது (பல்வாள்தேவன் பட்டாபிஷேகம் நடக்கிறது),  பாஞ்சாலியைஅஸ்தினாபுர சபையில் மானபங்கபடுத்தியது (கர்ப்பினியான தேவசேனாவை மகிழ்மதி சபையில் சிறைபிடிப்பது), பாண்டவர்களும் பாஞ்சலியும் வனவாசம் செல்வது(பாகுபலியும் தேவசேனாவும் கோட்டையை விட்டு வெளியேறுவது) என சகலமும் பாரத மயம்.

கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான் என்பதை சரித்திர கேள்வியாக்கி உலாவவிட்டதின் பதிலை சற்று மேம்போக்காக சினிமா கிளிஷேவாக பதில் சொல்லிவிட்டதை போல தான் தோன்றுகிறது.

அந்த சரித்திர கேள்வியில் கூட பொன்னியின் செல்வன் வாசம் வீசுகிறது. ஜம்பதாண்டுகளாக ஆதித்ய கரிகாலனை யார் கொன்றார் என்ற கேள்விக்கு விழிபிதுங்கி தான் நின்று கொண்டிருக்கிறார்கள் பொன்னியின் செல்வன் வாசகர்கள். அந்த கேள்விக்கு அமரர் கல்கிக்கு மட்டும் தான் விடை தெரியும் என்பது சரித்திரக் கொடுமை.

ஒருவேளை கமல்ஹாசன் மருதநாயகத்தையும் ரஜினிகாந்த் ராணாவையும் வெளியிட்டிருந்தால் இவ்வளவு சிலிர்ப்பு ஏற்ப்பட்டிருக்காதோ என்னவோ! அதிலும் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவனை சிலாகிக்காத கதை தனிக்கதை.

ஒரு இயக்குனராக ராஜமௌலியை பாராட்டாமல் இருந்தால் சினிமா ரசிகனாக இருப்பதில் அர்த்தமே இல்லாமல் போய்விடும திரைப்படத்தின் முதல் பாகத்திலும் சரி இரண்டாம் பாகத்திலும் சரி அந்த இடைவெளி காட்சிக்காகவே ராஜமௌலியை கொண்டாடலாம் மேலும் இரண்டாம் பாக இடைவேளை டைட்டில் கார்டில் “மகிழ்மதியே இளைப்பாறு” என்று குறிப்பிடுவதை போல மக்களும் தங்களை ஆசுவாச படுத்தி கொள்ள வெகு நேரம் பிடித்தது. 

ஜனரன்ஜகமாக கையாண்டவிதத்தையும் சின்ன சின்ன நுண்ணிய விடயங்களை கவனித்து எடுத்தவிதமும் சரி ராஜமௌலி பக்கா கிளாஸ் (சிவு-தமன்னா ஓவியம் வரைதல், பாகுபலி-தேவசேனா அன்னப்படகு ஏறுதல், காளகேயர்களை தீகம்பளம் கொண்டு வதம் செய்வது, மாடுகளின் கொம்பை பற்ற வைத்து விடுவது, சிவகாமி மற்றும் தேவசேனாவின் அடி மேல் அடி இடையுறு) என சொல்லி கொண்டே போகலாம் இன்னும் முக்கியமாக சொல்லவேண்டுமென்றால், பாரதத்தில் திரௌபதி துகிலுரித்த போது பாண்டவர்கள் மண்டியிட்டு கிடந்தார்கள் ஆனால் பாகுபலியிலோ தேவசேனவை மகிழ்மதி சபையில் சிறை பிடித்த போது பாகுபலியின் வசனமும் செய்கையும் தற்போதுள்ள இந்திய சூழ்நிலையின் பிரதிபலிப்பாகத்தான் உள்ளது அதற்கு திரையரங்கில் ஒலிக்கும் ஆரவாரமும் கரகோஷமுமே சாட்சி (மிகவும் ரசித்த காட்சி).

எது எப்படியோ உலக சினிமா ரசிகர்கள் தங்கள் பங்குக்கு பென்ஹர், டிராய், கிளாடியேட்டர், 300 என்று சொன்னால் இந்திய ரசிகர்கள் பாகுபலி 1, 2 என்று பெருமையுடனே சொல்லிக்கொள்ளலாம்.

– பிரசன்ன ரணதீரன் புகழேந்தி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s