முதன்முறையாக நான் ஆசையோடு எதிர்பார்த்து காத்திருந்த அந்த நாள் வந்தது. தஞ்சையின் மணிமகுடமாய் திரவிட நாட்டின் நெற்களஞ்சியமாய் சைவர்களின் வரலாறை தாங்கி நிற்கும் தஞ்சை பெரிய கோயிலை காண வேண்டும் என்ற ஆசை அன்று நிறைவேறியது.

பற்பல எதிர்பார்ப்புகள் சிற்சில ஆசைகள் என தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து நானும் சுமார் பதிமூன்று முறை அந்த கோயிலின் ஒவ்வொரு ஆதி அந்தத்தையும் அளந்து லயித்த என் நண்பனும் அங்கு சென்றோம்.

எனக்கோ ஒரே மயிர்கூச்சம் ஒரு புன்னிய ஸ்தலத்தை நோக்கி வருகிறோம் என்பதை தாண்டி ஆயிரம் ஆண்டு வரலாறை தாங்கி நிற்கும் ஒரு வரலாற்று பதிவை பார்க்க போகிறோம் என்ற ஆவல் தான் எனக்குள் இருந்தது ஆனால் தொடக்க முதலே எனை கேள்வி கணைகளால் என் நண்பன் துளைக்க நான் ஆடி போய்விட்டேன். அவன் கேட்கும் கேள்விகளுக்கு என்னால் பதில் கூற முடியவில்லை என்பதே உண்மை. இதோ அவன் வினவிய கேள்விகள்….

கேள்வி 1: “இவ்வளவு பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் பார் போற்றும் நாயகன் அருள்மொழிவர்மன் பொன்னியின் செல்வனாம் இராசராச சோழனின் சிலை ஏன் கோயிலுக்கு வெளியே இருக்கிறது என்றான்….”

“ஆமால ஏன் வெளில இருக்கு…”
நிச்சயமாக எதோ ஒரு அரசியல் ௐளிந்திருக்கும் என என் உள்மனது சொல்ல அதை நான் அவனிடம் சொல்ல அதற்கு “அப்பறம் சொல்றேன்” என அடுத்த கேள்வியை கேட்டான்….

கேள்வி 2: “ஒரு கோயிலுக்கு எதுக்கு அகழி”

“ம்ம்! கோட்டைக்கு தான் அகழி இருக்கும் கோயிலுக்கு எதுக்கு ஒருவேள இங்க இருந்து ஆட்சி செஞ்சாங்களா….”

“அதலாம் இல்ல! சரி வா” என்றான்.

கேள்வி 3: “நீ எங்க வேணாலும் போட்டோ எடுக்காலாம் போன வாட்டி வந்தப்ப கருவறையவே எடுத்தாய்ங்க ஏன்னா தமிழ்நாட்டுல சின்ன சின்ன கோயில்லாம் அறநிலையதுறை கட்டுப்பாட்டுல இருக்கு ஆன இவ்ளோ பெரிய கோயில் அவங்க கட்டுப்பாட்டுல இல்ல”

“ஏன் தெரியுமா?”

“என்னது அறநிலையத்துறை கட்டுப்பாட்டுல இல்லயா….”

கேள்வி 4: “இந்த கோயில் சைவ ஆகம விதிப்படி கட்டல “

“ஆமா! கொடிமரம், பலி பீடம், விமானம், கோபுர கலசம், நந்தி எல்லா புது அமைப்புல இருக்கு…”

கேள்வி 5: “இந்த கோயில்ல உற்சவர் பிரதிஷ்ட பண்ணது எப்ப தெரியுமா…

கோயில் கட்டுனப்ப உற்சவரே இல்ல அது தெரியுமா…”

“டேய் தல சுத்துதுடா…”

மெள்ள கோயிலின் கருவறையை நோக்கி நடந்தோம்…

ஒரே சிலிர்ப்பு பிரம்மாண்டமான சிவ லிங்கமாக பெருவுடையாரை பார்த்த பெருமிதம்….

கேள்வி 6: “சந்நதி நுழைவுல யார் வரவேற்குறாங்க பார்த்தியா…”

“என்னடா இது :0 !!!!

ம்ம் விநாயகர் ஒகே, வலப்பக்கம் முருகர்ல இருக்கனும் துர்கை இருக்காங்க…”

“விடு விடு வா…”

கேள்வி 7: “கருவறை நுழைவு தூண்கள பார்த்தியா, கருவறை முகப்பு பார்த்தியா???”

“என்னடா சிற்ப வேலைப்பாடுகளே இல்ல….”

“ஆஹா! அருமையான தரிசனம் நிம்மதியா  சாமி பார்த்தோம்ல”

“நீ எப்ப வந்தாலும் இப்படி பார்க்கலாம்”

பொடி நடையாக வெளியே வந்தோம் எதோ ஒரு நெகிழ்ச்சி சரியாக சொல்ல தெரியவில்லை

“டேய் கடைசியா ஒரு கேள்வி,

வா முருகர் சந்நதிக்கு போய் பேசுவோம்”

மெள்ள ரசித்து கொண்டே அங்கே சென்றோம்….

“டேய் செம சிற்ப வேலைப்பாடுகள்டா அழகோ அழகு….
முருகன் சந்நதி மட்டும் ஏன் இவ்ளோ வேலைப்பாடுகள்…”

கேள்வி 8: “ம்ம் மொதல்ல இந்த முருகன் சந்நிதி இங்க எப்ப கட்டுனாங்க தெரியுமா….

இதுக்குலாம் மொதல்ல பதில சொல்லு…

இங்க வரனும் வரனும் சொன்னீல பதில் சொல்லு…”

“எனக்கு நிஜமா தெரியாதுடா !” என தஞ்சை புது பஸ் ஸ்டாண்டுக்கு பயணமானோம்.

பொன்னியின் செல்வனை படித்துவிட்டு அருள்மொழிவர்மன் கட்டிய அந்த கோயிலை பார்க்க வேண்டுமென பேராவல் கொண்டு வந்தேன் ஆனால் வந்த இடத்தில் எனை யோசிக்க வைத்துவிட்டான் எனது நண்பன்.

வழிநெடுக யோசித்து கொண்டே வந்தேன் ஒருவாறு கண்டுபிடித்தேன் அதற்கு முன் அவன் வாயில் இருந்தே பிடுங்கிவிடுவோம் என்று மதுரை பஸ்ஸில் ஏறி உட்கார்ந்துவிட்டு நச்சரித்தேன் மெதுவாக சொல்ல ஆரம்பித்தான்….


ஒருவாரு அவன் கூறியது நம்பதகுந்தவையாக இருந்தாலும் அதில் பல மர்மங்கள் புதைந்து தான் கிடக்கிறது அந்த மர்ம முடிச்சுகளை அவிழ்க்க அந்த இராச ராச சோழன் தான் வரவேண்டும். இருகட்டும் அந்த கேள்விகளுக்கு அவன் தரப்பு பதில்களை பார்ப்போம். 

1♥ இராச ராச சோழன் இக்கோயிலை கட்டிய பின்பு பல ஆட்சியாளர்கள் பல படையெடுப்புகள் நடந்தது அதில் நிலைத்தது நாயக்கர் மற்றும் மராட்டிய சாம்ராஜ்யங்கள். மேலும் தஞ்சை அரண்மனை சரபோஜி மன்னர் வழி தேவஸ்தான கட்டுபாட்டில் இருக்காலாம் என்றும் கலைஞர் ஆட்சியில் சோழர் சிலை நிறுவபட்டபோதே பல சர்ச்சைகள் எழுந்ததும் ‘உள்ள வைக்க கூடாது’ என்று சில ஜாதிய அரசியல்கள் ஊடுறுவியது தஞ்சை மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

2♥ அகழி கட்டப்பட்டது சோழர்கள் ஆட்சியிலா நாயக்கர் ஆட்சியிலா என்பது இன்னும் விடை தெரியாமல் தான் இருக்கிறது தொல்லியல் துறை கூட அதற்கு பதில் கூற முடியாது ஆயினும் சோழ குல வழிதோன்றல் என்று தங்களை கூறிக்கொள்ளும் தற்கால சமூகம் ஆனிதரமாக கூறுகிறார்கள் சோழர்களால் கட்டமைக்கபட்டது என்று பாண்டியர்கள் எப்படி கடல் வணிகம் கடல் கொள்ளையில் அதிக ஆர்வம் காட்டினார்களோ அது போல சோழர்கள் படையெடுத்து கைபற்றிய பின்போ அல்லது திக்விஜயம் போதோ களவாடும் பழக்கம் கொண்டவர்கள் என்றும் அதை பதுக்கும் விதமாக கோயில்களை மற்றும் கோட்டை பாதளங்களை உபயோகிப்பர்களாம் ஆகயால் தான் அவர்களை கள்ளர்கள் என்கிறார்களாம் ம்ஹூம்.

3♥ மேல் குறியது போல தஞ்சை அரண்மனையின் 88 கோயில்களில் பெரிய கோயிலும் அடங்கும் எனவே அவர்கள் தேவஸ்தானத்தின் கட்டுபாட்டில் இருப்பதால் இந்து அறநிலையத்துறை கூட கேள்வி கேட்க முடியவில்லை கேட்பதற்கு வாய்ப்பும் இல்லை.

4♥ ஆகம விதிப்படி வைணவத்தில் 2, சைவத்தில் 28 என 30 ஆகமங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்து மதத்தைக் கட்டுப்படுத்துவதாகச் சொல்லப்படும் இந்த ஆகமங்களைப் பெரும்பான்மையான இந்துக்கள் கண்ணால் பார்த்ததே கிடையாது. இருந்தாலும் இதனை அடிபடையாக வைத்து தான் பல கோயில்கள் கட்டப்பட்டன கட்டப்படுகின்றன கட்டப்படபோகின்றன பெரும்பாலும் வைணவ தலங்கள் அனைத்தும் ஆகம விதிபடி கட்டப்பட்டது அதில் சிற் சில விதிவிலக்குகள் உண்டு. ஆனால் முழுமையாக எந்த அடிப்படையிலும் ஆகம விதிப்படி கட்டப்படாத கோயில் காரணம் ஒன்று திராவிட கலை இரண்டு கணிதவியல் வானியல் கோட்பாடுகளின் அழகியல் மேலும் இக்கோயில் பல புத்த விகாரங்கள் மற்றும் மடாலயங்களின் பாதிப்புகளால் வடிவமைக்கப்பட்டது எதனால் என்று பொன்னியின் செல்வனை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

5♥ திராவிட கட்டிட கலை என்பதால் ஆதிதிராவிடர்களாகிய சோழ பாண்டியர்கள் மூலவரை மட்டுமே வழிபடும் பழக்கம் கொண்டவர்கள். மேலும் உற்சவர் வழிபாடு ஆரிய ஆகம விதி தோன்றல் ஆக இருக்கலாம் என்று இந்து சமய ஆர்வலர்கள் கூறுவதுண்டு.

6♥ முருகனுக்கும் சோழர்களுக்கும் ஆகாது என்று ஒரு புரளி! (அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பிரமணியனாம் பாண்டியர்களின் ஆதர்ஷ நாயகனாம்) யார் கிளப்பினார்கள் என்று தெரியவில்லை. தீவிர சைவ சிவ வெறியர்கள் என்பதால் மூலவரை மட்டுமே வழிபடுவார்கள் மேலும் துர்கை தங்கள் குல தெய்வம் என்பதால் வரவேற்றிருக்கலாம்.

7♥ கருவறை தூண்களிலும் முகப்பிலும் ஆரிய ஆகம வேலைப்பாடுகள் இருக்கும். பெரிய கோவில் சுத்த திராவிட கட்டட கலை என்பதால் எந்த வேலைப்பாடுகளும் இல்லை.

8♥ முருகன் சந்நதி நாயக்கர் கால ஆரிய சிற்ப வேலைபாடுகள். கோயிலில் முருகன் சந்நதி இல்லை என்பதால் அவர்களால் கட்டபட்டது மேலும் விநாயகர் பெரிய நாயகி சந்நதி கூட பிற்காலத்தில் கட்டப்பட்டவையாம் ஆனால் ஆச்சர்யம் என்னவென்றால் சோழ குல தெய்வம் கொற்கையை அவர்கள் செதுக்கியது தான்.

இவை அனைத்தும் ஒரு தரப்பின் பதில்களே ஆதலால் மேலும் தொடர்வோம் ஆராய்வோம்….

– பிரசன்ன ரணதீரன் புகழேந்தி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s