பெரிய கோவிலின் பெரிய கேள்விகள்

பெரிய கோவிலின் பெரிய கேள்விகள்

முதன்முறையாக நான் ஆசையோடு எதிர்பார்த்து காத்திருந்த அந்த நாள் வந்தது. தஞ்சையின் மணிமகுடமாய் திரவிட நாட்டின் நெற்களஞ்சியமாய் சைவர்களின் வரலாறை தாங்கி நிற்கும் தஞ்சை பெரிய கோயிலை காண வேண்டும் என்ற ஆசை அன்று நிறைவேறியது.

பற்பல எதிர்பார்ப்புகள் சிற்சில ஆசைகள் என தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து நானும் சுமார் பதிமூன்று முறை அந்த கோயிலின் ஒவ்வொரு ஆதி அந்தத்தையும் அளந்து லயித்த என் நண்பனும் அங்கு சென்றோம்.

எனக்கோ ஒரே மயிர்கூச்சம் ஒரு புன்னிய ஸ்தலத்தை நோக்கி வருகிறோம் என்பதை தாண்டி ஆயிரம் ஆண்டு வரலாறை தாங்கி நிற்கும் ஒரு வரலாற்று பதிவை பார்க்க போகிறோம் என்ற ஆவள் தான் எனக்குள் இருந்தது ஆனால் தொடக்க முதலே எனை கேள்வி கணைகளால் என் நண்பன் துளைக்க நான் ஆடி போய்விட்டேன். அவன் கேட்கும் கேள்விகளுக்கு என்னால் பதில் கூற முடியவில்லை என்பதே உண்மை. இதோ அவன் வினவிய கேள்விகள்….

கேள்வி 1: “இவ்வளவு பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் பார் போற்றும் நாயகன் அருள்மொழிவர்மன் பொன்னியின் செல்வனாம் இராசராச சோழனின் சிலை ஏன் கோயிலுக்கு வெளியே இருக்கிறது என்றான்….”

“ஆமால ஏன் வெளில இருக்கு…”
நிச்சயமாக எதோ ஒரு அரசியல் ௐளிந்திருக்கும் என என் உள்மனது சொல்ல அதை நான் அவனிடம் சொல்ல அதற்கு “அப்பறம் சொல்றேன்” என அடுத்த கேள்வியை கேட்டான்….

கேள்வி 2: “ஒரு கோயிலுக்கு எதுக்கு அகழி”

“ம்ம்! கோட்டைக்கு தான் அகழி இருக்கும் கோயிலுக்கு எதுக்கு ஒருவேள இங்க இருந்து ஆட்சி செஞ்சாங்களா….”

“அதலாம் இல்ல! சரி வா” என்றான்.

கேள்வி 3: “நீ எங்க வேணாலும் போட்டோ எடுக்காலாம் போன வாட்டி வந்தப்ப கருவறையவே எடுத்தாய்ங்க ஏன்னா தமிழ்நாட்டுல சின்ன சின்ன கோயில்லாம் அறநிலையதுறை கட்டுப்பாட்டுல இருக்கு ஆன இவ்ளோ பெரிய கோயில் அவங்க கட்டுப்பாட்டுல இல்ல”

“ஏன் தெரியுமா?”

“என்னது அறநிலையத்துறை கட்டுப்பாட்டுல இல்லயா….”

கேள்வி 4: “இந்த கோயில் சைவ ஆகம விதிப்படி கட்டல “

“ஆமா! கொடிமரம், பலி பீடம், விமானம், கோபுர கலசம், நந்தி எல்லா புது அமைப்புல இருக்கு…”

கேள்வி 5: “இந்த கோயில்ல உற்சவர் பிரதிஷ்ட பண்ணது எப்ப தெரியுமா…

கோயில் கட்டுனப்ப உற்சவரே இல்ல அது தெரியுமா…”

“டேய் தல சுத்துதுடா…”

மெள்ள கோயிலின் கருவறையை நோக்கி நடந்தோம்…

ஒரே சிலிர்ப்பு பிரம்மாண்டமான சிவ லிங்கமாக பெருவுடையாரை பார்த்த பெருமிதம்….

கேள்வி 6: “சந்நதி நுழைவுல யார் வரவேற்குறாங்க பார்த்தியா…”

“என்னடா இது :0 !!!!

ம்ம் விநாயகர் ஒகே, வலப்பக்கம் முருகர்ல இருக்கனும் துர்கை இருக்காங்க…”

“விடு விடு வா…”

கேள்வி 7: “கருவறை நுழைவு தூண்கள பார்த்தியா, கருவறை முகப்பு பார்த்தியா???”

“என்னடா சிற்ப வேலைப்பாடுகளே இல்ல….”

“ஆஹா! அருமையான தரிசனம் நிம்மதியா  சாமி பார்த்தோம்ல”

“நீ எப்ப வந்தாலும் இப்படி பார்க்கலாம்”

பொடி நடையாக வெளியே வந்தோம் எதோ ஒரு நெகிழ்ச்சி சரியாக சொல்ல தெரியவில்லை

“டேய் கடைசியா ஒரு கேள்வி,

வா முருகர் சந்நதிக்கு போய் பேசுவோம்”

மெள்ள ரசித்து கொண்டே அங்கே சென்றோம்….

“டேய் செம சிற்ப வேலைப்பாடுகள்டா அழகோ அழகு….
முருகன் சந்நதி மட்டும் ஏன் இவ்ளோ வேலைப்பாடுகள்…”

கேள்வி 8: “ம்ம் மொதல்ல இந்த முருகன் சந்நிதி இங்க எப்ப கட்டுனாங்க தெரியுமா….

இதுக்குலாம் மொதல்ல பதில சொல்லு…

இங்க வரனும் வரனும் சொன்னீல பதில் சொல்லு…”

“எனக்கு நிஜமா தெரியாதுடா !” என தஞ்சை புது பஸ் ஸ்டாண்டுக்கு பயணமானோம்.

பொன்னியின் செல்வனை படித்துவிட்டு அருள்மொழிவர்மன் கட்டிய அந்த கோயிலை பார்க்க வேண்டுமென பேராவல் கொண்டு வந்தேன் ஆனால் வந்த இடத்தில் எனை யோசிக்க வைத்துவிட்டான் எனது நண்பன்.

வழிநெடுக யோசித்து கொண்டே வந்தேன் ஒருவாறு கண்டுபிடித்தேன் அதற்கு முன் அவன் வாயில் இருந்தே பிடுங்கிவிடுவோம் என்று மதுரை பஸ்ஸில் ஏறி உட்கார்ந்துவிட்டு நச்சரித்தேன் மெதுவாக சொல்ல ஆரம்பித்தான்….


– பிரசன்ன ரணதீரன் புகழேந்தி

​விட்டுகொடுத்தல் ஒரு துறவுநிலை!

​விட்டுகொடுத்தல் ஒரு துறவுநிலை!

தாய் வந்து கேட்டால் அன்பை விட்டு கொடு…
தந்தை வந்து கேட்டால் அறிவை விட்டு கொடு…

நண்பன் வந்து கேட்டால் நன்றியை விட்டு கொடு…

காதலி வந்து கேட்டால் காதலை விட்டு கொடு…

மனைவி வந்து கேட்டல் ஊடலை விட்டு கொடு…

பிள்ளைகள் வந்து கேட்டால் உயிலை விட்டு கொடு…

காலன் வந்து கேட்டால் உயிரை விட்டு கொடு…

அந்த இறைவனே வந்து கேட்டால் அனைத்தையும் விட்டு கொடு…


♥♥பிரசன்ன ரணதீரன் புகழேந்தி♥♥
#புதியகம்பன்

மணிரத்னம் ஓய்வு பெற வேண்டுமா?

மணிரத்னம் ஓய்வு பெற வேண்டுமா?

மணிரத்னம் என்ற மனிதர் சுமார் 34 வருடம் திரைத்துறையில் பணியாற்றுகிறார் அதாவது ஒரு தலைமுறை என்றே சொல்லலாம். “நம்ம தாத்தா பாட்டி நாயகனை தியேட்டரில் போய் பார்த்திருப்பார்கள் நம்ம அப்பா அம்மா ரோஜாவை தியேட்டர்ல பார்த்துருபாங்க! இப்ப நம்ம காற்று வெளியிடை பார்க்குறோம்”. இன்னும் அதே இளமையோட அதே துடிப்போட ஒரு வண்ணமையான தன் அழகியல் படைப்பில் எப்படி இப்படி மணிரத்னம் அவர்களால் கொடுக்கமுடியுது.

இதற்கான காரணம் மனிதர்களின் உளவியலையும் இன்றைய மனிதர்களின வாழ்வியலை முக்கியமாக மேல்தட்டு மக்களோட வாழ்வியலை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார் என்றே தான் சொல்லவேண்டும்.

பொதுவாக மணிரத்னம் ஒரு நல்ல கலைஞர் அது அவர் படைப்புகளில் நன்றாக தெரியும் அவர் ஒரு அற்புதமான பிலிம் மேக்கர் ஆனால் ஒரு எழுத்தாளரா மணிரத்னம் கொஞ்சம்  தடுமாறுவார்  இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் அவர் திரைப்படத்தில் பல தழுவல்களை நாம் பார்க்கலாம் உதரணத்திற்கு நாயகன், தளபதி, இருவர் கண்ணத்தில் முத்தமிட்டாள், ராவணன் என பல படைப்புகளை சொல்லலாம். ஆனால் காதல் திரைப்படங்களை பொறுத்த வரையில் அவரது சொந்த எண்ணங்களையே மிகவும் நேர்த்தியகவும் அழகாகவும் படைக்கபட்டவை. அந்த படங்களில் வருகிற ஒவ்வொரு காட்சியை வைத்தே கதை சொல்லலாம் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் மௌன ராகம் திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியில் கதாநாயகி ரேவதி நாயகன் மோகனிடம் சொல்வார் “நீ தொட்டா கம்பளி பூச்சி ஊர மாறி இருக்கு”

அதே போல ஒகே கண்மணி திரைப்படத்தில் நாயகனை பார்த்து நாயகி கூறுவாள் “அம்மாவ வர சொல்லவா” எதற்காக என்று நாயகன் கேட்க “கல்யாணத்த பத்தி பேச” என கதாநாயகி நித்யா மேனன் கூறும்போது நாயகன் வெளிபடுத்தும் அந்த முக பாவனையே படத்தின் மொத்த கதை.

இப்போது வெளியாகியிருக்கும் காற்று வெளியிடை திரைப்படத்தில் கூட அதை அற்புதமாக செய்திருக்கிறார். “நீ என்ன பண்ணாலும் நான் ஏன் உன்ன தேடி தேடி வரேன்” என நாயகி கூறும் அந்த காட்சியில் மொத்த கதையையும் சொல்லிவிட்டார் மேலும் நாயகனின் ஆணாதிக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒவ்வொரு காட்சியிலும் பதிவு செய்திருப்பார்.
மணிரத்னம் போன்ற ஒரு இயக்குனர் நம் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த சொத்து. சிலர் கதை இல்லை லாஜிக் இல்லை என்று கூறுவது அவரவர் விருப்பம் ஆனால் திரைப்படத்தை எப்படி பார்க்கவேண்டுமென்றே  தெரியாமல் எல்லோரும் சேர்ந்து சொல்லும்போது நாம் சொல்ல வேண்டியதாய் இருக்கிறது. கதை இருந்த எத்தனையோ திரைப்படங்களை நாம் கண்டுகொள்ளவில்லை கமல்ஹாசன் போன்ற கலைஞனின் எத்தனை கதை உள்ள படங்களை நாம் ரசித்திருக்கிறோம் ஹேராம், ஆளவந்தான், மகாநதி, குணா,  அன்பே சிவம் மற்றும் உத்தம வில்லனை நாம் ரசித்திருகிறோமா? இல்லை ஆனால் ஒன்றுமில்லாத அவ்வை சண்முகி, மைக்கெல் மதன காமராசன், பஞ்ச தந்திரம், அபூர்வ சகோதர் போன்ற திரைப்படத்தை நாம் கைதட்டி ரசித்திருக்கிறோம் ஆனால் இப்போது நாம் படத்தில் கதை இல்லையென்று சொல்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.

இது மணிரத்தினத்தை ஆதரித்து எழுதுவது அல்ல ஒரு திரைப்படத்தை எப்படி பார்க்க வேண்டும் என்பதற்கான பதிவு. நாம் மணிரத்தித்தை கிளாசிக் கிளாசிக்கென்று  சொல்லி நாம் தூர நின்று பார்க்கும் மனிதர்களை படமாக்கி கொண்டிருக்கிறார். இயக்குனர் ஷங்கரை பிரம்மாண்ட இயக்குனர் என்று சொல்லி சொல்லி படத்திற்கு தேவையே இல்லாத பிரம்மாண்டங்களை செய்து கொண்டிருக்கிறார். பாலாவை ஒரு வித்தியாசமான படைப்பாளியென்று மூத்திரை குத்தி அவரை நாம் படம் எடுக்க வைத்தது  தாரை தப்பட்டை போன்ற நாகரிகமற்ற  படங்கள். இது எல்லாம் நாம் செய்த தவறு.

ஹாலிவுட்டில் ஆஸ்கர் வாங்கின ரெவனன்ட் என்ன கதை ஒரு தந்தை தன் மகனுக்காக பலி வாங்குகிற அழுத பழைய கதை அதை நாம் கொண்டாடினோம் ஏனென்றால் அதை எடுத்த விதம் காட்டு மிராண்டிகளாக நடிகர்களை உருமாற்றி வெறும் கேமராவை மட்டும் எடுத்து கொண்டு போய் எடுக்கப்பட்ட படம் அதை உலக சினிமா ரசிகர்கள் ஒரு வாழ்வியல் அழகியலாக பார்த்தார்கள். சமிபத்தில் ஆஸ்கர் வாங்கிய மூன்லைட்டில் கூட பெரிய கதை ஒன்றும் இல்லை ஒரு மனிதனுடைய மூன்று பருவங்கள் அவ்வளவு தான் அதில் கதை எங்கே என கேட்க முடியாது. அதை நம் ரசிகர்கள் பார்த்தால் சிலாகிப்பார்கள் அதை இங்கே படமாக்கினால் கழுவி ஊற்றுவார்கள். ஷாஷாங்க் ரிடம்ஷனில் டாம் ராபின்ஸ் சிறையில் இருந்து தப்பித்த காட்சியை பாராட்டியவர்கள் இன்று காற்று வெளியிடையில் கார்த்தி செய்யும் போது மறுக்கிறார்கள்.


மணிரத்தினம் அவர்களை ஒரு இந்திய ஸ்பீல்பர்க்காக தான் பார்க்கிறேன் ஏனென்றால் ஸ்பீல்பர்கால் மட்மே தான் ஸ்கின்ட்லர்ஸ் லிஸ்ட் போன்ற கிளாஸும் ஜீராஸிக் பார்க் போன்ற மாஸும் எடுக்க முடியும்.

சங்கரை ஒரு இந்திய கேமரோனாக
ராஜமௌலியை ரிட்லி ஸ்காட்டாக
கமலஹாசனை ஒரு இந்திய நோலனாக தான் பார்க்க முடிகிறது.

ஆனால் என்னுடைய ஆசை இந்தியாவில் ஒரு அல்ஜான்ரோ இன்யாரித்தோவை பார்க்கவேண்டும் என்று தான்.

அதற்கு நாம் தயாராக இருக்கவேண்டும் ஆனால் நம் அறிவு மிகவும் கீழே இருப்பது வருத்திற்குரியது. புத்தகம் வாசிக்கும் சமுகமே நல்ல சிந்தனைகளை பெறும் ஹாலிவுட்டில் முக்கால்வாசி திரைப்படங்கள் நாவலை தழுவி எடுக்கப்படுகிறது அங்கே திரைப்படத்திற்கு இருக்கும்  வர்த்தகத்தை விட புத்தகத்திற்கு வர்த்தகம் ஜாஸ்தி. அதனால் அவர்கள் நாசாவை வைத்து நூறு படங்கள் எடுப்பார்கள் நாம் இஸ்ரோவை வைத்து ஒன்று கூட எடுக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.

– பிரசன்ன ரணதீரன் புகழேந்தி

அற்ப மானிடா

​புழு திண்ணும் சரிதம் தாங்கி திரிகின்றோம் 

மதி நுட்ப வேட்கையினால் அலைகின்றோம்

வெறும் காற்றடைத்த பையை கொண்டு ஆழ குழி தோண்டி எந்த காற்றை எடுக்க போகிறாய் மானிடா 

வாழ்விடத்தை அழித்துவிட்டு வாழ்வாதரத்தை தொலைத்துவிட்டு எங்கு சென்று வாழ போகிறாய் மானுடா

உன் தொழில் நுட்பத்தை மேருகேற்றி அந்த பகலவனை குளிர்வித்து இவ்வையம் வந்து மகிழ வா என் அற்ப மானிடா

♥♥ப்ரசன்ன ரணதீரன் புகழேந்தி♥♥

சர்வ அதிகாரி

​முதலாவது உலகப் போரின்போது சிப்பாயாக கூட கலந்து கொள்ள தகுதி யில்லை என புறக்கணிக்கப்பட்ட ஒருவன் இரண்டாவது உலக போரில் தலைமையேற்று உலகநாடுகள் அனை த்தைமே நடுங்கவைத்தவன் யாரென்றால் அவன் தான் ஜெர்மனி நாட்டின் சர்வாதிகாரியாக அப் போது இருந்த அடோல்ஃப் ஹிட்லர் தான் அவர்.

அந்த ஹிட்லர்… எதிரி நாடுகளையே கதிகலங்கச் செய்யும் பலவிதமான அதிரடியாக போர் வியூகங் களையும், போர்உத்திகளையும் கையாண்டவர் என்பது உங்களுக்குதெரியும். அந்நேரத்தில் வாழ் வில் வெற்றி உன் வசம் ஆவதற்கு அந்த ஹிட்லர் அதாவது வெற்றிக்கு வித்திடும் அதிரடியான பத்து குறிப்புக்களை நமக்கு சொல்லியுள்ளார். இதோ அந்த அதிரடி ஆலோசனைகள்

ஹிட்லரின் அதிரடி ஆலோசனைகள்:

1) மடையனுடன் விவாதிக்காதே..! மக்கள் உங்கள் இருவரையும் பிரித்தறிவதில் தவறிழைத்து விடலாம்.

2) தோற்றவன் புன்னகைத்தால் வெற்றியாளன் வெற்றியின் சுவை இழக்கிறான்.

3) ஒரு மனிதன் அவனது தாய் மரணிக்கும் வரை குழந்தையாகவே இருக்கிறான்.

4) அவள் மரணித்த அடுத்த கணம் அவன் முதுமையடைந்து விடுகிறான்.

5) இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்றிருக்கின்ற மனிதனிடம், நீ சவால் விடாதே!

6) நீ நண்பனாக இரு. உனக்கு நண்பன் இருக்க வேண்டும் என ஆசை கொள்ளாதே!

7) பின்னாலிருந்து நீ விமர்சிக்கப்பட்டால் நினைத்துக்கொள்: நீ முன்னால் இருக்கிறாய் என்று.

8) உனது மனைவியின் ரசனையில் நீ குறைகாணாதே. ஏனென்றால் உன்னையும் அவள்தான் தெரிவு செய்தாள்.

9) நீ உன் எதிரியை விரும்பும்போது அவனது அற்பத்தனத்தை உணர்ந்து கொள்கிறாய்.

10) நாம் எல்லோரும் நிலவைப் போன்றவர்கள். அதற்கு இருளான ஒரு பக்கமும் உண்டு.

ஜாதிகள் இருக்குதடி பாப்பா

ஜாதிகள் இருக்குதடி பாப்பா 

அதை காலில் போட்டு மிதித்து நசுகிடு பாப்பா
அக்கினி பிளம்பொன்று எரியுதடி பாப்பா அதில் சமயதீயினை போட்டு பொசுகிடு பாப்பா 
இன வெறி தலைகேறுமடி பாப்பா 
அந்த தலைகளை கொய்து உருட்டிடு பாப்பா
மொழி பேதம் தழைத்தோங்குமடி பாப்பா அதை வேரோடு பிடுங்கி எறிந்திடு பாப்பா
ஒரு தாய் மக்கள் என உணர்த்திடு பாப்பா
இவ்வையகம் மனிதத்தால் வாழ்வுற செய்திடு பாப்பா…


தத்தோம் தத்தோம் தகிட தகிட தத்தோம்…


ப்ரசன்ன ரணதீரன் புகழேந்தி

கர்ம வினை

​ஒரு சமயம் ஒரு அரசன் அந்தணர்களுக்கு உணவளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அப்படி ஒரு நாள் உணவளித்துக் கொண்டிருக்கையில் வானில் ஒரு கழுகு, தன் இரையான இறந்த பாம்பு ஒன்றை தன் கால்களில் பற்றிக் கொண்டு கடந்து சென்றது. பாம்பின் வாயிலிருந்து ஒரு சில துளிகள் விஷம் அரசன் வைத்திருந்த உணவுப் பாத்திரத்தில் விழுந்து விட்டது. எவரும் அதை கவனிக்க வில்லை.

அரசன் அந்த உணவை ஒரு அந்தணருக்கு அளிக்க, அதை உண்ட மறு கணமே அவர் இறந்து போனார். அரசன் மிகவும் வருத்தம் அடைந்தான்.

கர்மாக்களுக்கான வினைகளை நிர்ணயிக்கும் சிதிரகுப்தனுக்க

ு குழப்பமாகி விட்டது. யாருக்கு இந்த கர்மவினையைக் கொடுப்பது?

*கழுகிற்கா, பாம்பிற்கா அல்லது அரசனுக்கா ?*

கழுகு அதன் இரையைத் தூக்கிக் கொண்டு சென்றது அது அதன் தவறு இல்லை. இறந்து போன பாம்பின் விஷம் அதன் வாயிலிருந்து வழிந்தது பாம்பின் குற்றம் இல்லை. அரசனும் இதை வேண்டுமென்றே செய்ய வில்லை. அது அவனை அறியாமல் நடந்த விஷயம்.

சரி தன் எஜமான்னான எமதர்மனிடமே கேட்கலாம் என்று எமனிடம் சென்று தன் குழப்பத்தைக் கூறினான் சித்திரகுப்தன். இதைக் கேட்ட எமதர்மன், சற்று நேர சிந்தனைக்குப் பிறகு, இதற்கான விடை விரைவில் கிடைக்கும் என்றும், காலம் வருமவரை பொறுமையாக இருக்கவும் அறிவுறித்தினான்.

ஒரு நாள்…சில அந்தணர்கள் உதவி நாடி அந்த அரசனைக் காணச் சென்றார்கள். அரண்மணைக்கு வழி தெரியாமல், சாலையோரமாக வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண்மணி ஒருவரிடம் வழி கேட்டார்கள்.

அவளும் சரியான பாதையை அவர்களுக்கு விளக்கி விட்டு அவர்களிடம் “ ஒரு விஷயம்..சற்று எச்சரிக்கையாக இருங்கள்..இந்த அரசன் அந்தணர்களைக் கொல்பவன்” என்று கூறினாள்.

இந்த வார்த்தைகளை அவள் கூறி முடித்த்தும், சித்திரகுப்தனுக்கு தெளிவு பிறந்து விட்டது. அந்தணரைக் கொன்ற கர்மாவின் வினை இந்த்த் பெண்மணிக்கே என முடிவு செய்தான்.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம், மற்றவர்கள் மீது பழி சுமத்தும் போது அதில் உண்மை இருக்குமானால் பழி சுமத்துபவருக்கு அந்த கர்மாவில் 50 விழுக்காடு வந்து சேரும்.பழி சொன்னதற்காக. நடந்த எதையுமே உணராமல் அபாண்டமாக பழி சுமத்துவோருக்கே கர்மவினை அனைத்து சேரும்.

எனவே, மற்றவர்கள் மீது பழி சொல்லும் முன் யோசிக்க வேண்டும். பேசும் போது எச்சரிக்கையுடன் பேச வேண்டும்.